ம.சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ம.சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

திருக்குறள் வழி நான்..

                


திருக்குறள்,சொல்ல வேண்டிய கருத்தை அழகாக இரண்டு வரிகளில் எடுத்துரைக்கின்றன. 1330 குறள்களில் என் மனம் கவர்ந்த திருக்குறள்கள் இரண்டு , அவை, அறத்துப்பாலில் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் வரும்.

சொல்லின் வலிமை...


                 
     நாம் பேசக்கூடிய சொல் பிறரை மகிழ்விக்கவில்லை என்றாலும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்.

நீதிதேவன் மயக்கம்..

                                           

     ”நீதிதேவன் மயக்கம்” என்பது “அறிஞர் அண்ணா” எழுதிய நூலின் பெயர். இந்நூல் எனது மனம் கவர்ந்த நூல்.

காசநோய்..

                 
               
   காசநோய் என்பது நுரையீரலை பாதிக்கக் கூடிய தொற்று நோய். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும் போதோ தும்பும் போதோ அவரிடம் உள்ள கிறுமிகள் மற்றொறுவருக்கு பரவுகிறது. காசநோயை கண்டு பிடித்தவர் ‘ராபர்ட் கார்க்’. இவர் மார்ச் 24, 1882 ஆம் ஆண்டு இந்நோயைக் கண்டு பிடித்தார்.

தேடல்...

                   
 
            
22 ஆம் நாற்றாண்டு, சென்னை மாநகரம். கோகுல், 28 வயதுடைய ஆராய்ச்சியாளர். அவன் தாவரவியல் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளான். ”சிறு வயதில் இவ்வளவு திறமையா?” என்று பலரும் பாராட்டி உள்ளனர். கோகுலுக்கு, கடவுள் பக்தி உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளும் அளவு இருந்தது.  

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பொறுமை


           


நான் படித்ததில் என் மனம் கவர்ந்த ஒரு குட்டி கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த கதை;
      அது ஒரு இனிய காலைப்பொழுது. மனைவி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறுகிறார். மகன் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் வேகமாக உணவு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது வெளியில் ஒரு சிட்டுக் குருவி இறை தேடிக் கொண்டு இருக்கிறது. அப்பா அந்தக் குருவியை சுட்டிக் காட்டி ’இதன் பெயர் என்ன என்று?’ கேட்கிறார். அதற்கு மகன் சிட்டுக் குருவி’ என்று பதில் அளிக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தந்தை மீண்டும் மகனிடம் அந்தப் பறவையை சுட்டிக் காட்டி ‘இதற்கு பெயர் என்னவென்று?’ கேட்கிறார். சற்று பொறுமையை இழந்த மகன் ‘சிட்டுக் குருவி’ என்று கோபமாக கூறினார். மீண்டும் தந்தை அவ்வாறு கேட்க கோபமடைந்த மகன் ‘அம்மா! அப்பாவுக்கு வேலையே இல்லையா? கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்.’ அம்மா நீங்களாவது அப்பாவிற்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றான்.
          அவன் சென்ற பின்பு கணவன் தன் மனைவியிடம் கூறினார் ‘இது போலத் தான் அவன் சிறு வயதில் கேட்டபொழுது நான் பொறுமையை இழக்காமல் பதிலளித்தேன்.’ ஆனால் இந்த காலத்து இளைஞர்களிடம் பொறுமை என்பதே இல்லை என்று கூறினார்.
            இந்தக் கதை என் மனம் கவரக் காரணம் இதில் சொல்லப்பட்ட கருத்தே. எனவே பொறுமையுடன் செயல் பட்டால் எதையும் வெல்ல முடியும்.
















ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தியானம் என்றால் என்ன...?






         நம் நாட்டில் தியானத்திற்கு என்று பல பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தியானம் பற்றி ரமண மகரிஷி கூறிய கருத்து மிகவும் எளிமையான ஒன்று.
        அவரைக் காண வந்த ஒரு பெண், ரிஷி அவர்களே!! என் குழந்தைக்கு ”தியானம் பற்றி எளிமையாக கூறுங்கள்” என்று கேட்டார். அந்த குழந்தையை அழைத்த ரிஷி, குழந்தை கையில் ஒரு தோசையைக் கொடுத்து சில விதிமுறைகளைக் கூறினார். அது என்னவென்றால் நான் “ம்ம்” என்று சொல்லும் போது நீ தோசையை சாப்பிட வேண்டும். அடுத்த முறை நான் “ம்ம்” என்று சொல்வதற்குள் நீ தோசையை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார். மகரிஷி “ம்ம்” என்று கூறினார், குழந்தை தோசையை சாப்பிட ஆரம்பித்தது. குழந்தை, அவர் எப்போது “ம்ம்” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே தோசையை வேகமாக சாப்பிட்டது. மகரிஷி சிறிது நேரம் சென்ற பின் “ம்ம்” என்று சொன்னார். அதற்குள் குழந்தை தோசையை. முழுமையாக சாப்பிட்டு முடித்தது. அப்போது மகரிஷி குழந்தையிடம், “இதன் மூலம் நீ என்ன அறிந்தாய்?” என்று கேட்டார். அப்போது அக்குழந்தை சொன்னது, நீங்கள் எப்போது “ம்ம்” என்று சொல்வீர்கள், அதற்குள் தோசையை சாப்பிட்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் என்றது. அப்போது மகரிஷி கூறினார், ”கவனத்தை நீ செய்த காரியத்தில் ஒரு முகமாக செலுத்தினாய் அல்லவா அது தான் தியானம்”. நாம் செய்யும் காரியத்தில் முழு கவனத்துடன் இருப்பதே “தியானம்”. 

சனி, 25 பிப்ரவரி, 2017

நாலடியார்


      
                  
முன்னுரை:

          பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்ததாக  நாலடியார். இந்நூலுக்கு ‘ வேளாண் வேதம் ‘ என்ற பெயரும் உண்டு. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டது. கல்வி பற்றி நாலடியார் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

கல்வி அழகே சிறந்தது:

               நன்கு சீவப் பட்ட கூந்தல் அழகும், முந்தானைக் கரையழகும், மஞ்சள் பயன்படுத்துவதால் வரும் அழகும் அழகல்ல. மனதில் நல்ல நெறியுடன் நடக்கின்ற நடுவுநிலைமையை உண்டாகும் கல்வி அழகே சிறந்தது.

அறியாமையைப் போக்கும் மருந்து:

                கல்வி இன்பத்தை பயக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது பெருகும், நம் புகழை எடுத்துச் சொல்லும், சாகும் வரை கல்வியால் சிறப்பு உண்டு. மூவுலகத்திலும் அறியாமையைப் போக்க கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                புன்செய் நிலத்தில் விளைந்த உப்பை நன்செய் நிலத்தில் விளைந்த உப்பினைவிட பெரியதாக கருதுவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றோரை உயர் குடியில் பிறந்தவராகவே கருதுவர்.


கல்வியின் சிறப்பு:

             கல்வியை யாராலும் களவாட முடியாது. பிறருக்கு வழங்குவதால் நன்மை மட்டுமே உண்டாகும். மன்னர் சினம் கொண்டு போர் புரிந்தாலும் கல்விச் செல்வத்தை மட்டும் கைப்பற்ற இயலாது. எனவே, ஒருவன் தமக்குப் பிறகு தம்முடைய அடுத்த தலைமுறைக்கு எஞ்சிய பொருளாக சேர்த்து வைக்க வேண்டியது கல்விச் செல்வம் மட்டுமே. பிற செல்வங்கள் அல்ல.

கல்வி கற்கும் முறை:

               கல்விக்கு கரை இல்லை, ஆனால் அதைக் கற்போருக்கோ சிறிய ஆயுட்காலம். அந்த குறுகிய காலத்திலும் அவர்களுக்கு பல பிணிகள் உண்டாகின்றன. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரைத் தவிர்த்து எவ்வாறு பாலை மட்டும் அருந்துகிறதோ அது போல கல்வியை ஆராய்து தெளிவாக கற்க வேண்டும்.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                    தோணி இயக்குபவனை தாழ்ந்த குலத்தார் என்று இகழ்வர். ஆனால் அவனையே துணையாய் கொண்டு ஆற்றைக் கடப்பர். அதுபோல நால் கற்ற துணையால் நல்ல பயன்களை அடையலாம்.

தேவலோகத்தை விட சிறந்தது:

                  தேவலோகமே சிறந்தது என்ற கருத்துடையவர், குற்ற மற்ற நூல்களைக் கற்று நல்ல கேள்வித் தன்மையை உடைய சான்றோருடன் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடிய பின்பு அவர் மனதில் கற்றோர் சபையை விட தேவலோகமே சிறந்தது என்ற கருத்து உண்டானால் அவர் தேவலோகம் செல்லலாம்.    

கற்றவரோடு நட்பு கொள்ளுதல்:

                 கல்லாதவரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவைமிக்க அடிப்பகுதியை விட்டு நுனிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும். கற்றலரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவை மிக்க அடிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும்.

கற்றாரோடு கொண்ட நட்பின் தன்மை:

               தண்ணீரில் உள்ள பாதிரிப் பூ எவ்வாறு அத்தண்ணீருக்கும் தன் மணத்தைத் தருகிறதோ கற்றவரோடு கல்வி அறிவு இல்லாத ஒருவன் கொள்ளும் நட்பு அவனுக்கு நாளும் நன்மையைத் தேடித் தரும்.

அறிவு சார்ந்த நால்களைக் கற்க வேண்டும்:

            மிகுதியான நூல்களைக் கற்று அறிவு சார்ந்த நால்களைக் கல்லாதவனுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை.

முடிவுரை:

          நாலடியார் மூலம் கல்வியின் சிறப்பையும், கற்றவரோடு கொள்ளும் நட்பின் தன்மையையும் அறியலாம். கல்வியின் பயன் அதன் வழி ஒழுகுவதால் மட்டுமே அடைய முடியும்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

உணர்வுகள்...!!!


Image result for smiley face

                      
          அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஹாசினி மகேந்திரன். நான் வலைப்பதிவில் எழுதும் முதல் கட்டுரை இது தான். உணர்வுகள் என்ற தலைப்பு சற்று வித்தியாசமானது தான்.
                        உணர்வுகள் உள்ளவர்கள் மனிதர்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் மாமனிதர்கள். எல்லா உணர்வுகளையும் சரி சமமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை என்பதே இல்லை.
                        இதற்கு ஒரு உதாரணம் கூற ஆசைப்படுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தருணம் அது. அவரைக் காணச் சென்ற சுவாமி விவேகானந்தர் தன் குருவிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.
                        அதில் முதலாவது. மக்கள், கடவுள் எனக்கு மட்டும் ஏன் துன்பத்தைத் தருகிறார்? என்று துன்பம் வரும் வேளையில் கவலை கொள்கிறார்களே அது ஏன்? என்று கேட்க, அப்போது ராமகிருஷ்ணர் சொல்கிறார், மக்கள் தனக்கு இன்பம் வரும் போது கடவுள் ஏன் எனக்கு மட்டும் இன்பம் தருகிறார் என்று வினவுவதில்லை. ஆனால் துன்பம் வரும் வேளையில் மட்டும் அக்கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எந்த உணர்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே.
             மேலும் அவர் கூறியதாவது, தங்கம் நெருப்பில் பட்டு உருகும் போது அது மிளிர ஆரம்பிக்கும். அது போலத் தான் மனிதனும் துன்பங்களை அடையும் போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
             துன்பம் வரும் வேளையில் இதுவும் கடந்து போகும் என்று மனதில் கொள்வதே சிறந்தது.